91

இந்தத் தொடரை எழுத எனக்குப் பெருமளவு துணையாக இருந்து அவ்வப்போது வேண்டிய தகவல்களையும், சிதம்பரம் பற்றிய நினைவுகளையும், கோயில் பற்றிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட என் கணவருக்குத் தான் இது சொந்தம். மற்றும் எனக்கு வேண்டிய தகவல்களை நான் தேடி எடுத்துக் கொள்ள முக்கிய காரணமாய் இருந்த எங்கள் குருவும் சிதம்பரம் கோயிலின் தீட்சிதரும் ஆன திரு ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்துக் கொண்டு இந்த எழுத்தை அவருக்கே காணிக்கை ஆக்குகின்றேன்.

இந்தச் சிதம்பர ரகசியம் தொடர் எழுதுவதிலே என் பங்கு என்பது ஒண்ணுமே இல்லை, பல குறிப்புக்களைக் கொடுத்து உதவிய எங்கள் கட்டளை தீட்சிதர் ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும், நண்பர் ஆகிரா அவர்களும், நண்பர் சிவசிவா அவர்களும், ஸ்வாமி சிவானந்தர் எழுதிய நடராஜர் பற்றிய தகவலகளும், சிவன் பற்றிய தகவல்களும்,பதஞ்சலி யோக சாஸ்திரம் பற்றிய வலைத் தளம், ஸ்ரீவித்யை பற்றிய வலைத்தளம், temple.net மற்றும் tamil.net போன்ற வலைத்தளங்களும், theevaaram.org, saivam.org, wikipedia.org, தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் வலைத்தளம், தல புராணங்கள் என உள்ளனவும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய வலைத்தளங்கள், இன்னும் கூகிள் தேடலில் கிடைத்த சில அரிய வலைத்தளங்களுமே இதற்குக் காரணகர்த்தாக்கள். அவற்றை நான் உபயோகம் செய்து கொண்டதைத் தவிர என் பங்கு ஏதுமே இல்லை. ஆகவே காரணம் ஏதும் இல்லாமல் என்னைப் புகழ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது கூட மாலிக்காஃபூர் பற்றித் தகவல் தேடுகிறேன். “திண்ணை”யில் அரவிந்தன் நீலகண்டன் எழுதினது தவிர, கண்ணபிரான் கே.ஆர்.எஸ். கூகிளில் books.google.com -ல் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சுட்டி கொடுத்திருந்தார். என்றாலும் அதில் வரும் பிரமஹஸ்தபுரம் ஒருவேளை சிதம்பரத்தைக் குறிக்கலாம் என்ற அனுமானத்தைத் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. books.google.com -ல் புத்தகங்கள் என்ன விலைக்கு விற்பார்களோ, நம்மால் முடியாது என்று நான் மேலே போய் முயற்சி செய்தும் பார்க்கவில்லை!

துணைப் புத்தகங்கள்: A Study of Chidambaram and its Shrine, by T.Ramalinga Dikshithar M.A.Litt.,

Swamy Sivananda’s Website: www.sivananda.org
Yoga details taken from : B.K.S. Iyengar’s Books and சுந்தர யோக சிகிச்சை, யோசார்யா சுந்தரம், பெங்களூர்.
சிதம்பர வைபவச் சுருக்கம்: நடராஜ ரத்ன தீட்சிதர், ஸோமஸேது தீட்சிதர், T.ராமலிங்க தீட்சிதர்.(புத்தகம் வெளிவந்த வருஷம் தெரியலை, மிகப் பழைய புத்தகம்,)
வைதிக சம்வர்த்தனி: ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மாவால் போடப் பட்டது. அதிலே உள்ள சிதம்பர புராணம் ஸோமஸேது தீட்சிதரால் எழுதப் பட்டது.
தில்லைக் கோயில் வரலாறு: கலைமாமணி, பேராசிரியர் அமரர் திரு க.வெள்ளைவாரணனார், தில்லைத் தமிழ் மன்றம் வெளியீடு.
தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலின் பழமையும் திருச்சித்திரகூட அமைப்பும்: ஆக்கியோர் தமிழ்ப்பெரும்புலவர், சித்தாந்தப் பேராசிரியர் திருவாளர் சபா. சிவப்ரகாசம் பிள்ளை அவர்கள், தில்லை. வெளியிட்டோர் தில்லைத் திருமுறைக் கழத்தோர்.
திருச்சிற்றம்பலமும், திருச்சித்ரகூடமும்: டாக்டர் ந. ராமசுப்ரமணியன், சட்ட நிர்வாக ஆலோசகர், பிருந்தாவன் அவென்யு, சென்னை -45.

இவற்றைத் தவிர, திரு சிவசிவா என்னும் திரு வி.சுப்ரமணியன் அவர்கள் பலவிதத் தகவல்களையும், முக்கியமாய் பேராசிரியரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான திரு நாகசாமியின் சில குறிப்புகளைக் கொடுத்து உதவினார்கள். திரு ஆகிராவும் ஒரு சில சுட்டிகள் கொடுத்து உதவினார். திரு திவா தி.வாசுதேவன் அவர்கள் சிதம்பரம் பற்றிய இரு புத்தகங்கள் கொடுத்து உதவினார். சரித்திரத் தகவல்களும் அவ்வப்போது நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து பார்க்கப் பட்டது. சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ராமலிங்க தீட்சிதரின் மகன் தங்க தீட்சிதர், தெற்குத் தெரு நடராஜ தீட்சிதர் ஆகியோரை நேரில் சந்தித்தும் , நெய்வேலி நடராஜ ஸ்வாமி தீட்சிதர், தொலைபேசி உரையாடல் மூலமும், ராஜா தீட்சிதர் அவர்கள் எழுதிய திருவாதிரை பற்றிய குறிப்புகள் அனைத்தின் உதவியாலுமே இதை எழுத முடிந்தது. அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்குகின்றேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book