68

பல புத்தகங்களும் வாங்கிப் படிக்கமுடியவில்லைதான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதற்காகச் சான்றுகள் ஏதும் இல்லாமலும் எதுவும் எழுதவில்லை. என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எழுதுகின்றேன். இதில் காய்தல், உவத்தல் பார்ப்பது அவரவர் கண்ணோட்டமே அன்றி என் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. காதில் காலிப்ளவர் வைக்க முடியாட்டாலும், குறைந்த அளவுக்கு ஒரு கனகாம்பரமாவது வைக்கலாம் என்று எண்ணம். மற்றபடி இங்கே தெரிவிக்கப் பட்ட கருத்துகள் அனைத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலே தொடருகின்றேன்.
இரண்டாம் குலோத்துங்கன் மகாவிஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியது பற்றிப் பார்த்தோம். இதுபற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை இருப்பது பற்றி நண்பர் கொடுத்த தகவல்களிலேயே இருக்கின்றது. என்னுடைய வேலைப் பளுவினால் என்னால் சரிவரப் பதிவு போடமுடியாததால் தாமதம் ஆகிவிட்டது. மேற்கண்ட தகவல்கள் இருப்பது இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும், தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படிபுரிந்து வந்தவர்கள் தில்லைமூவாயிரவர் என்பது விளக்கமாம்” (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III (1938-39) பகுதி I) என்று ஆராய்ச்சியாளரும், வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகின்றது. குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப் பட்டதும் தவறு என்று (பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96 பார்க்க).சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது.

கிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் அச்சுதராயர் காலத்தில் மறு பிரதிஷ்டை செய்யப் பட்டதும், அரசனால் நியமிக்கப் பட்ட வைணவர்களே விஷ்ணுவுக்குப் பூஜை, வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர். அப்போதில் இருந்து இங்கே வைகானசமுறையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பின்னர் கொண்டமநாயக்கன் காலத்தில் இந்தச் சந்நிதித் தனிக்கோயிலாக மாறும் பெருமையைப் பெற்றது. தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இதை ஆட்சேபித்து நடராஜருக்கே என உரிய கோயிலில் விஷ்ணுவிற்குத் தனிக் கோயில் வேண்டாம் எனச் சொல்லியும், போராட்டங்கள் நடத்தியும், கொண்டம நாயக்கன் கோயிலைக் கட்டினான் என்றும், தீட்சிதர்கள் சிலர் அப்போது நடந்த போராட்டத்தில் கொண்டமநாயக்கனின் வீரர்களால் சுடப்பட்டு இறக்க நேரிட்டது எனவும், அதை நேரில் பார்த்த ( Jesuit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரிற் கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார்

The Aravidu Dynasty by Father Heras (P. 553)
1. A notable instance of the struggle between the two sects is the lamentable event that took place at Chidambaram in 1597 A.D. While Krishnappa Nayaka of Jinji, himself a Staunch Vaishnava was there superintending the improvements which he had ordered at the temple of Govinda Raja within the great Saiva Temple. Father N. Pimenta, who passed through Chidambaram at this time narrates in one of his letters that on this occasion a great controversy arose as to “Whether it were lawful to place the signe of Perumal in the temple at Chidambaram. Some refused, others by their legates importunatly urged and the Naiks of Gingee decreed to erect in the temple” These last words of Pimenta indicate that after the restoration of the idol to the temple by Rama Rayan it had again been removed and its shrine probably destroyed. In order to re-install it with due honour, Krishnappa Nayaka ordered the old shrine to be repaired and even perhaps enlarged’
This was the cause of the whole trouble. “The priests of the Temple which were the Treasuries” Continues, Pimenta (were) with standing, and threatening if it were done, to cast down themselves from the top. The Brahmanes of the temple swore to do the like after they buried the former, which yet after better advice they performed not”. But Krishnappa Nayaka was unmoved by any such threat when the reconstruction of the shrine was carried on with out hesitation where upon the priests climbing one of the high Gopurams of the temple started to cast themselves down while the Nayak was in the temple, “About twenty has perished in that precipitation on that day of our departure, whereat the Naichus angry, caused his gunners to shoot at the rest which killed two of them. A woman also was so shot in this Zealous quarrel that she cut her own throat”. Naturally Krishnappa Nayaka accomplished his purpose in spite of this opposition.

தொடரும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book